நிலவில் குகை…! வரும் காலத்தில் ஆராய்ச்சியாளர்களின் நிலவு..! அதிசய தகவல்கள்…
நிலவில் குகை இருப்பதாகவும் வரும் காலங்களில் விண்வெளி வீரர்கள் தங்கிக்கொள்ளும் குகையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1969ல் விண்கலம் மூலம் நிலவில் முதன்முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் கால் பதித்தது அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு பல ஆய்வாளர்கள் நிலவு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி, நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் பல அரிய தகவல்களை வெளிவந்தன.
குறிப்பாக,, நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதனால், எதிர்காலத்தில் நிலவில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து, அங்கு பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் நிலவில் தரையிரங்கிய பகுதியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு இதே போல் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சந்திர குகைகள் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்த குகையானது சுமார் 40 மீட்டர் அகலமும், பலமீட்டர் நீளமும் கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலங்களில் நிலவில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தங்கிக்கொள்ள ஏதுவாக இந்த குகைகள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
readmore...உஷார்!! 4G To 5G அப்டேட் செய்ய போறீங்களா? – சைபர் க்ரைம் எச்சரிக்கை!!