For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண் டாக்டர்களுக்கு இரவு நேரப் பணி தவிர்க்க வேண்டும்...! மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு..‌!

Night work should be avoided for female doctors
06:54 AM Aug 18, 2024 IST | Vignesh
பெண் டாக்டர்களுக்கு இரவு நேரப் பணி தவிர்க்க வேண்டும்     மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு  ‌
Advertisement

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Rattirer Shaathi' என்ற பாதுகாப்புத் திட்டத்தைத் மேற்குவங்க அரசு தொடங்கியுள்ளது.

Advertisement

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த நிலையில் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Rattirer Shaathi' என்ற பாதுகாப்புத் திட்டத்தைத் அரசு தொடங்கியுள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிற பணியிடங்களில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாப்பதற்காக மேற்கு வங்க அரசு 'Rattirer Shaathi' என்ற பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் அடையாள அட்டைகளைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒட்டுமொத்த மேற்பார்வைக்காக அனைத்து முக்கிய மருத்துவ வசதிகளிலும் காவல்துறையினரால் நிறுத்தப்படுவார்கள். பெண் டாக்டர்கள் உட்பட பெண்களின் பணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்தவரை இரவு நேரப் பணியைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement