முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆயுதப் போராட்டம்: "விரைவில் கைதாகும் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.."! மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் பரபரப்பு பேட்டி.!

12:28 PM Feb 04, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இந்திய அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவான என்.ஐ.ஏ காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் விரைவிலேயே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி இசை மதிவாணன் உள்ளிட்டோரின் வீடுகளில் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். முதலில் பணம் தொடர்பான சோதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மீட்டெடுப்பதற்காக ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகள் அரசியல் மிரட்டல் நடவடிக்கைகள் என நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் உட்பட முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் என்ஐஏ சோதனையில் அவர்களின் வீடுகளில் இருந்து எந்த விதமான ஆதாரங்களோ ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் சீமான். ஆனால் சாட்டை துரைமுருகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய இணையமைச்சர் முருகன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் "நாம் தமிழர் கட்சி இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை என்.ஐ.ஏ அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்திய அரசிற்கு எதிராக செயல்படும் நாம் தமிழர் கட்சியினர் மீது தமிழக காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தான் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவினர் நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளில் சோதனை நடத்தி இருக்கின்றனர். மேலும் அவர்களது வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
central ministerdurai murugannaam tamizhar katchiniavel muruganஆயுதப் போராட்டம்
Advertisement
Next Article