For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூல்...! ஜுலை 22-ம் தேதி கடைசி நாள்...!

NHAI Invites Global Expression of Interest for Implementation of GNSS-Based Electronic Toll Collection in India
05:35 AM Jun 08, 2024 IST | Vignesh
நாடு முழுவதும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூல்      ஜுலை 22 ம் தேதி கடைசி நாள்
Advertisement

இந்தியாவில் மின்னணு முறையில் சுங்க வசூல் அமலாக்கத்திற்கு உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதளவு பயன்படுத்தப்படும் போக்குவரத்தாக, சாலை வழி போக்குவரத்து அமைந்துள்ளது. கிராமப்புற மக்களை நகர்ப்புறங்களில் இணைப்பதற்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தை துரிதப்படுத்தவும், சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதுள்ள ஃபாஸ்ட் டேக் முறையுடன் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு புதுமையான மற்றும் தகுதி உள்ள நிறுவனங்களிடமிருந்து உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்வமுள்ள நிறுவனங்கள், tender@ihmcl.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 2024 ஜூலை 22 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தங்களின் ஆர்வத்தைத் தெரிவிக்கலாம். ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்க வசூலை செயல்படுத்துவது தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரின் சுமூகமான, தடையற்ற பயணத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement