முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த ருதுராஜ்!… ஆல் ஃபார்மட்டிலும் அசத்தல்!

07:23 AM Dec 01, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. இதன் 3வது போட்டியில், இதர வீரர்கள் சற்று தடுமாறிய நிலையில் துவக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் மிகச் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். குறிப்பாக முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக விளையாடிய அவர் அதன் பின் அந்நியனாக மாறி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 123* ரன்கள் குவித்தது அனைவரையும் வியக்க வைத்து பாராட்ட வைத்தது. இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisement

புனேவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனது அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள், டெஸ்ட் என ஒவ்வொரு போட்டிக்கும் தனி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஃபார்மெட் கிரிக்கெட் அணியிலும் ருதுராஜ் இடம்பெற்றுள்ளார். ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசியில் சூழலுக்கு தகுந்தார் போல் அதிரடியாகவும் விளையாடும் பக்குவத்தை கொண்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் சதமடித்துள்ள ருதுராஜ் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்த அவர் டி20 கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரில் 2021 ஆரஞ்சு தொப்பி வென்று சென்னை கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் வரும் காலங்களில் அவர் கண்டிப்பாக 3 வகை என கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முதன்மை பேட்ஸ்மேனாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Tags :
3 ஃபார்மெட்டிலும் இடம்ஆல் ஃபார்மட்டிலும் அசத்தல்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிருதுராஜ் கெய்க்வாட்
Advertisement
Next Article