For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த அதிர்ச்சி!… பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது!… 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு!

06:11 AM May 20, 2024 IST | Kokila
அடுத்த அதிர்ச்சி … பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது … 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு
Advertisement

Patanjali: யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி பிராண்டான சோன் பப்டி, உணவுப் பரிசோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் லீலா தார் பதக் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சோதிக்கப்பட்ட சோன் பப்டி தரமானது இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, உணவுப் பரிசோதனையில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்று அறிக்கை அளித்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாதம் சிறைதண்டனை விதித்து உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளர் லீலா தர் பதக்குக்கு 5000 ரூபாயும் விநியோகஸ்தர் அஜய் ஜோஷிக்கு 10,000 ரூபாயும், பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமாருக்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Readmore: தாய்ப்பாலில் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்!! முகம் பளபளனு மாற இதை ட்ரை பண்ணுங்க!!

Advertisement