For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த அதிர்ச்சி..!! கர்நாடகாவிலும் பயங்கர நிலச்சரிவு..!! நிலவரம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!!

At present, such a huge landslide has also caused a stir in Karnataka.
04:54 PM Jul 30, 2024 IST | Chella
அடுத்த அதிர்ச்சி     கர்நாடகாவிலும் பயங்கர நிலச்சரிவு     நிலவரம் என்ன    வெளியான பரபரப்பு தகவல்
Advertisement

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று நள்ளிரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. அதாவது, தற்போது கர்நாடகாவிலும் இதுபோன்ற மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்த நிலையில், இன்று ஹாசன் மாவட்டத்தில் சக்லேஸ்பர் தாலுக்காவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் கார் லாரி, எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகியவை சிக்கியுள்ளது. தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகள் முடிவதற்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பெங்களூரு- மங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More : வயநாடு நிலச்சரிவு..!! வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் உடல்கள்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement