For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Paytm-க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!... நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா!

06:00 AM May 06, 2024 IST | Kokila
paytm க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி     நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
Advertisement

Paytm நிறுவனத்தின் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement

கடந்த சில மாதங்களாகவே பேடிஎம் நிறுவனத்திற்கு மிகவும் கஷ்ட காலம் என்று சொல்லலாம். ஏனென்றால், சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு வதந்திகளும் அந்நிறுவனத்தின் மீது பரப்பப்படுகிறது. One97 கம்யூனிகேஷன்ஸ் மூத்த நிர்வாகி அதாவது, கடந்த மார்ச் மாதம் பேடிஎம் இன் தாய் நிறுவனத்தின் நிர்வாகி பிரவீன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து paytm நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அதிகமானோர் அதாவது 25 முதல் 50% வரை பணியாளர்கள் ஆட்குறைவு செய்யப்பட்டதாக செய்திகள் பரவின. இந்த செய்தி முற்றிலும் தவறானது என paytm நிறுவனம் அதற்கு விளக்கம் கொடுத்தது. அந்நிறுவனத்தின் மறு சீரமைப்பு முயற்சிகள் மற்றும் செயல்திறன் தொடர்பான சரி செய்தல் ஆகியவை பணிநீக்கங்கள் என தவறுதலாக பேசப்பட்டு வருவதாக paytm நிறுவனம் விளக்கம் கொடுத்தது.

இந்தநிலையில், தற்போது, பணம் செலுத்துதல் மற்றும் கடன் வழங்கும் வணிகங்களை மேற்பார்வையிட்ட பேடிஎம் நிறுவனத்தின் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட காரணங்களுக்காக இ்ந்த முடிவை எடுத்துள்ளார். அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதி வரை பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஆலோசகராக அவர் செயல்படுவார் என்று பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் தனது ஒழுங்குமுறை தாக்கலில், அவரது ராஜினாமாவை நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அன்று வணிக நேரம் முடிவடையும் நேரம் முதல் அவர் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.

Readmore: புதிய ரெக்கார்டு!… தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜடேஜா!

Advertisement