For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Pension... வரும் நவ: 30-ம் தேதி வரை கால அவகாசம்...! உடனே இதை செய்ய வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்....!

06:40 AM Nov 20, 2023 IST | 1newsnationuser2
pension    வரும் நவ  30 ம் தேதி வரை கால அவகாசம்     உடனே இதை செய்ய வேண்டும்     இல்லை என்றால் சிக்கல்
Advertisement

இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Advertisement

மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பொதுவாக ஓய்வூதியம் பெறும் நபர், ஆயுள் சான்றிதழை வழங்க, நிறுவனத்திற்கு முன் நேரடியாக செல்ல வேண்டும். இருப்பினும், முதியவர்களின் சிரமத்தை நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது, இது ஓய்வூதியம் வழங்குவதற்கு போதுமான ஆதாரமாகக் கருதப்படுகிறது‌ .

17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள்/ துறைகள், ஓய்வூதியர் நலச் சங்கங்களுடன் இணைந்து 50 இலட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு 2023 நவம்பர் 30 வரை நாடு தழுவிய இயக்கம் 100 நகரங்களில் ஆயுட்கால சான்றிதழ் வழங்க 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

Tags :
Advertisement