முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..!! விரைவில் வெளியாகும் செம குட் நியூஸ்..!!

01:56 PM Apr 09, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்ந்ததை தொடர்ந்து, வீட்டு வாடகை படி எப்போது உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆ முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு நலத்திட்டங்களை மத்தியில் ஆளும் அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதாவது 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது இந்த அகவிலைப்படியை தொடர்ந்து போக்குவரத்து சலுகை, குழந்தையின் கல்வி சலுகை, சுற்றுப்பயணத்திற்கான பயண சலுகை, ஓய்வூதியம் மற்றும் வீட்டு வாடகை படி போன்ற சலுகைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் X, Y மற்றும் Z நகரங்களுக்கான அடிப்படை ஊதியத்தில் வீட்டு வாடகை படி முறையை 24 சதவீதம் 16 சதவீதம் மட்டும் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

தற்போது அதனைத் தொடர்ந்து அகவிலைப்படி 50% எட்டியதால் வீட்டு வாடகை படியை மாற்றி அமைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனவே, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்ததாக வீட்டு வாடகை படி உயர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read More : Alert | கொளுத்தும் கோடை வெயில்..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

Advertisement
Next Article