முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!! என்ன தெரியுமா..?

Jio has launched 3 low cost recharge plans.
02:55 PM Aug 13, 2024 IST | Chella
Advertisement

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட ரீசார்ஜ் கட்டணங்கள் கடந்த மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், விலை குறைவான 3 ரீசார்ஜ் பிளான்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கடந்த மாதம் ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தின. ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், பி.எஸ்.என்.எல் நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் அதிக டேட்டா பலன்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதால், பெரும்பாலானோர் BSNL-க்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய விலையிலேயே சில திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.199 கட்டணத்திற்கு 18 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, சினிமா, கிளவுட் போன்ற ஓடிடிகளுக்கான சப்ஸ்கிரைப்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதேபோல, ரூ.209 திட்டத்தில், 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜி.பி தினசரி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

அதேபோல், ரூ.249 திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜி.பி தினசரி டேட்டா கிடைக்கும். இதில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.

Read More : செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துறீங்களா..? அதிலிருக்கும் ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
ரீசார்ஜ் கட்டணம்ஜியோ நிறுவனம்
Advertisement
Next Article