அடுத்த 3 நாட்கள் சவாலாக இருக்கும்!… மக்கள் வெளியில் போகாதீங்க!… உதவி எண்களும் அறிவிப்பு!… ராதாகிருஷ்ணன் அலர்ட்!
தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும் என்றும் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சாலையில் தேங்கிய நீரை அகற்றம் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதாவது, நேற்று மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவானது. இதுதொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தொடர் கனமழையின் காரணமாக அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும் என்றும் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைக்கலாம்; 044 25619204, 044 25619206, 044 25619207 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.