For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதலுக்காக சிவபெருமான் தவமிருந்த, இக்கோவிலுக்கு சென்று வந்தால் திருமண தோஷம் நீங்கும்.! எங்கு உள்ளது.!

07:51 AM Feb 12, 2024 IST | 1newsnationuser5
காதலுக்காக சிவபெருமான் தவமிருந்த  இக்கோவிலுக்கு சென்று வந்தால் திருமண தோஷம் நீங்கும்   எங்கு உள்ளது
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில். இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்பட்டு வருகிறது. மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு எமதர்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் இந்த திருக்கோயிலில் குப்த கங்கை என்று அழைக்கப்படும் தீர்த்தம் ஒன்று உள்ளது. அங்கு எமதர்மனை வேண்டி கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நீராடி வந்தால் பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. காசிக்கு சென்று வந்தால் எந்த அளவிற்கு பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்குமோ அதே அளவிற்கு சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது.

இக்கோயிலில் உள்ள மகிஷாசுர மர்த்தினி சன்னதியை வணங்கி 108 முறை சுற்றி வந்தால் பயம், தடை போன்றவை நீங்கி எடுத்த காரியங்களில் வெற்றி அடையலாம். குறிப்பாக சிவபெருமான் மலைமகளை காதலித்து அவர் கிடைக்க வேண்டும் என்று தவமிருந்த இடம் இக்கோயில் தான் என்று கூறப்பட்டு வருகிறது.

எனவே திருமண தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க கோயில் தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதர் - மருவார் குழலையம்மையை தரிசித்து சந்தன இலைகளை வைத்து அர்ச்சனை செய்து, செண்பகப்பூ மலர் மாலையை சாற்றி அபிஷேகம் செய்து வந்தால் தோஷம் நீங்கி விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்று பிரம்ம புராணம் கூறுகிறது.

Tags :
Advertisement