For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்காலத்தில் வெப்பத்தையும், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் தரும் அதிசய கோயில்.! எங்கு உள்ளது.!?

07:05 AM Feb 10, 2024 IST | 1newsnationuser5
குளிர்காலத்தில் வெப்பத்தையும்  வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் தரும் அதிசய கோயில்   எங்கு உள்ளது
Advertisement

தமிழ்நாட்டில் தென் பகுதியில் ஜெயங்கொண்டம் என்ற இடத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம். இக்கோயில் கி.பி 1035 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சோழர்கள் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நிறுவினார்கள் என்பதற்கு நினைவுச் சின்னமாக அவர்களால் கட்டப்பட்டது தான் இந்த கோயில்கள். குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

Advertisement

தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக கருதப்பட்டு வரும் இக்கோயிலின் உள்ளே நுழைந்ததுமே மிகப்பெரிய நந்தி சிலை  அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் பிரகதீஸ்வரர் தாயான பெரியநாயகியுடன் காட்சியளிக்கிறார். இங்கு அமைந்துள்ள நந்தி வெறும் சுண்ணாம்பு கல்லினால் மட்டுமே செய்யப்பட்டு பல நூறு வருடங்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நந்தியின் மீது பகலில் சூரிய ஒளிபட்டால் அது அப்படியே கோயிலினுள் எதிரொலிக்கிறது. கோயிலில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டாலும் நந்திமீது படும் சூரிய ஒளி கோயிலின் உள்ளே அணையா விளக்காக இருந்து வருகிறது. இப்படி ஒரு கட்டிடக்கலை அறிவை சோழர்கள் செய்திருப்பது தற்போதுள்ள பல கட்டிடக்கலை வல்லுனர்களுக்கும் வியப்பாகவே இருந்து வருகிறது.

பிரகதீஸ்வரர் ஆலயத்தின் மற்றொரு தனி சிறப்பாக கருதப்படுவது, இக்கோயிலின் கருவறைக்குள் சந்திரகாந்த் கல்லினாலான பீடத்தில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலநிலை வெயிலாக இருந்தால் கோயிலின் உள்ளே குளிர்ச்சியாகவும், வெளியே குளிர்ச்சியாக இருந்தால் கோயில் உள்ளே வெப்பமாகவும் உணர வைக்கிறது.

Tags :
Advertisement