For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண் குழந்தைகளுக்கு புத்தாண்டு பரிசு!… சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு!… மத்திய அரசு அறிவிப்பு!

02:37 PM Dec 30, 2023 IST | 1newsnationuser3
பெண் குழந்தைகளுக்கு புத்தாண்டு பரிசு … சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு … மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

ஜனவரி-மார்ச் காலாண்டில் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளும், மூன்று ஆண்டு கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளும் மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

Advertisement

பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதாவது ஜனவரி-மார்ச் காலாண்டில் சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளும், மூன்று ஆண்டு கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விகிதங்கள் அப்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 8 சதவிகிதம் முதல் 8.2 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் 3 ஆண்டு கால டெபாசிட்டுக்கு 7 சதவிகிதம் முதல் 7.1 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் பிபிஎஃப் மற்றும் சேமிப்பு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக அப்படியே தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி 2023-24ம் நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்திற்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக அப்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 115 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்துக்கு டிசம்பர் காலாண்டில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் அப்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர வருமான திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 7.4 சதவிகிதம் வட்டி அப்படியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 2.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகள் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தியுள்ளது. ஆனால் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆர்பிஐ கடன்களுக்கான பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை மாற்றமால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement