For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

New year 2025 : புத்தாண்டு அன்று கட்டாயம் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்..!!

New Year 2025 : Don't forget to visit these temples in Chennai on New Year..!
06:00 AM Jan 01, 2025 IST | Mari Thangam
new year 2025   புத்தாண்டு அன்று கட்டாயம் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்
Advertisement

2025ம் ஆண்டு புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கிறோம்.. ஆனால் அதற்கு முன்பு 2023 ம் ஆண்டிற்கு நன்றி சொல்லி விடை கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும். சென்ற ஆண்டில் கிடைத்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்வதுடன், கிடைக்காமல் போன விஷயங்களுக்கும் சேர்த்து நன்றி சொல்ல வேண்டும். இதனால் பிறக்க போகும் புதிய ஆண்டில் அவைகள் இன்னும் சிறப்பாக நமக்கு நடப்பதற்கு வழிவகுக்கும். அதே சமயம் புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால் இன்னும் சிறந்தது. புத்தாண்டு அன்று சென்னையில் இருக்கும் இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக அமையும். அந்த கோயில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

Advertisement

வடபழனி முருகன் கோவில் : சென்னையில் அடையாளமாக விளங்கக் கூடியது வடபழநி முருகன் கோவில். முருகன் மீது கொண்ட பற்றின் காரணமாக பக்தர்கள் இந்த கோவிலை வடபழநி ஆண்டவள் கோவில் என்றே அழைக்கின்றனர். 1890 களில் ஓலைக்கூரைக் கொட்டகையில் உருவாக்கப்பட்ட இக்கோவில் பிறகு பக்தர்களின் ஆதவால் ராஜகோபுரத்துடனான கோவிலாக அமைக்கப்பட்டது. மூலவர் பழநி முருகன் காலில் பாதரட்சையுடன் காட்சி அளிக்கிறார். ராஜகோபுரத்தில் கந்தபுராண காட்சிகளும், கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நடன அசைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில் தனிச்சிறப்பாகும்.

கபாலீஸ்வரர் கோவில் : சென்னையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் சிவ பெருமான் கபாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பக்தர்கள் இவரை பாசமாக கபாலி என்றே அழைக்கின்றனர். தாயார் கற்பகவள்ளி. இக்கோவில் பல்லவ மன்னர்களால் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் உள்ள மிக பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் மார்ச் மாதம் 12 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் புகழ்பெற்றதாகும்.

அஷ்டலட்சுமி கோவில் : கடற்கரையில் அமைந்த மிக முக்கியமான கோவில்களில் ஒன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவில். சென்னையில் உள்ள மிக அழகான கோவில்களில் இதுவும் ஒன்று. பழமையான இந்த கோவிலில் எட்டு விதமான லட்சுமிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். நான்கு நிலைகளாக அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி ஆகியோரையும், 2வது தளத்தில் மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை தரிசிக்கலாம். 3வது தளத்தில் சந்தான லட்சுசி, விஜயலட்சுமி, வித்தியா லட்சுமி, கஜலட்சுமி சன்னதிகளையும். 4வது தளத்தில் தனலட்சுமி மட்டும் தனியாக காட்சி தருகிறார்.

பார்த்தசாரதி கோவில் : சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில். சென்னையில் உள்ள மிக பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. அழகிய வண்ணமயமான கோபுரம் இக்கோவிலின் சனிச்சிறப்பாகும். பெருமாள் மீசையுடன் காட்சி தரும் ஒரே திருத்தலம் இது மட்டும் தான். இங்கு மூலவர் வெங்கட கிருஷ்ணன் தவிர நரசிம்மர், ராமர், வராகர் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வெங்கட கிருஷ்ணனுக்கு மிகவும் உகந்த நாட்கள் என்பதால் இந்த நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

​காளிகாம்பாள் கோவில் : சென்னை பாரிமுனையில் தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ளது மிக பழமை வாய்ந்த, புகழ்பெற்ற, அதே சமயம் பக்தர்களால் மிகவும் சக்திவாய்ந்த கோவிலாக கருதப்படும் ஸ்ரீ காளிகாம்பாள் கோவில். இக்கோவில் கி.பி.1640 ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இக்கோவில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சி காலத்தில் சேதப்படுத்தப்பட்டு, பிறகு மீண்டும் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அன்னை காளிகாம்பாள் மிக கம்பீரமாகவும், அதே சமயம் சாந்தமே வடிவாகவும் காட்சி தருகிறாள்.

Read more ; Happy New Year 2025 : பூத்தது புது வருடம்.. 365 நாட்களும் இந்த பூ வாடாமல் வாழ்வில் வாசம் வீச.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

Tags :
Advertisement