புதிய போர்!. இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகளை வீசிய ஈரான்!. ராணுவத்து அதிரடி உத்தரவிட்ட ஜோ பைடன்!
Iran - Israel War: ஹெஸ்புல்லா தலைவர் மற்றும் ஹமாஸ் அதிகாரி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று (அக்டோபர் 1) இரவு இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை வீசியது. தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் தாக்குதலை அதிபர் ஜோ பிடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் கண்காணித்து வருகின்றனர். தேசிய பாதுகாப்புக் குழுவானது, ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்கவும், இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஹெஸ்பொல்லா தலைவர் மற்றும் ஹமாஸ் அதிகாரி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக நேற்று (செவ்வாய்) இரவு, இஸ்ரேல் மீது டஜன் கணக்கான ஏவுகணைகளை வீசியது, அதன் பிறகு டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே பல வெடிப்புகளின் சத்தம் கேட்டது. புதிய ஏவுகணைத் தாக்குதல்களின் அறிகுறியாக இஸ்ரேலில் மீண்டும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளன. எனினும், ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் வெகு சிலரே காயமடைந்துள்ளதாகவும், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Readmore: இன்று மகாளய அமாவாசை.. பித்ரு தோஷ பரிகாரம் எப்போதும் செய்ய வேண்டும்? முன்னோர்களை வழிபடுவது எப்படி?