ஒரே ஒரு போன் கால்.. 27 லட்சம் அபேஸ்..!! இந்த தப்ப செஞ்சிடாதீங்க மக்களே..
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வாட்ஸ்ஆப் காலில் ஒரு பெண் பேசியிருக்கிறார். கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும், இ-சிம் வசதி புதிதாக வந்திருப்பதால், அதனை ஆக்டிவ் செய்துகொண்டால், செல்போன் தொலைந்தாலும் எளிதாக சிம்கார்டு பெறலாம், எண்களை இழக்க வேண்டாம் என்று அப்பெண் கூறியிருக்கிறார்.
அவர் சொல்வது உண்மை என நம்பி, அப்பெண் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். ஒரு கோடு வரும், அதனை பதிவிடவும் என்று சொல்லியிருக்கிறார். அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில், அவரது செல்போன் செயலிழந்துவிட்டது. அது மட்டுமல்ல, அவர் செல்போன் செயலிழந்த போதும் கூட, செப்டம்பர் 1ஆம் தேதியே புது சிம் வந்துவிடும் என்றுதான் நினைத்திருக்கிறார்.
ஆனால், செப்டம்பர் 1ஆம் தேதி புதிய சிம்கார்டு வராததால், தனது செல்போன் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்திருக்கிறார். அவர்கள் இவரது பிரச்னை தெரியாமல், அதே எண்ணில் புதிய சிம் கார்டுக்கு அப்ளை செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். அவரும் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளார்.
அப்போது அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவல்களில், அவரது வைப்புத் தொகைகள் எடுக்கப்பட்டுவிட்டன, இரண்டு வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்டது, அவரது பெயரில் செயலிகள் மூலம் ரூ.7.40 லட்சம் அளவுக்கு கடன் பெறப்பட்டுள்ளது என்று குறுந்தகவல்கள் வந்துள்ளன. அவரது செல்போன் மூலமாக, மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடித்து அதன் மூலம் அப்பெண்ணிடமிருந்து ரூ.27 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Read more ; 2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!