வந்தாச்சு புது ரூல்ஸ்..!! விமான பயணிகள் இனி லக்கேஜ் கொண்டு செல்ல முடியாது..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!
விமானங்களில் லக்கேஜ் கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், விமான பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளது. இதற்கிடையே, மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய லக்கேஜ் விதிகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலோ நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். புதிய விதிகளின்படி, பயணிகள் இப்போது விமானத்திற்குள் ஒரு கைப்பை அல்லது கேபின் பையை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு பொருந்தும்.
ஒரு பயணி எந்த வகுப்பில் விமான டிக்கெட் புக் செய்துள்ளார் என்பதை பொறுத்து லக்கேஜை கொண்டு செல்வது மாறுபடும் நிலை தற்போது இருந்து வருகிறது. சரக்கு பெட்டியில் போடக்கூடிய லக்கேஜிற்க்கு குறிப்பிட்ட எடை அளவும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய லக்கேஜிற்கு குறிப்பிட்ட எடை அளவும் தற்போது நடைமுறையில் உள்ளது. இதுவரை பயணிகள் கையில் இரண்டு மூன்று லக்கேஜ் எடுத்து சென்றாலும் அனுமதிக்கப்பட்ட எடையளவுக்கு விட குறைவாக இருந்தால் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இனி இரண்டு மூன்று லக்கேஜ் எல்லாம் எடுத்துச் சொல்ல முடியாது. கையில் ஒரே ஒரு கைப்பை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதிகபட்சம் 7 கிலோ வரை கேபின் லக்கேஜை எடுத்துச் செல்ல முடியும். இது உள்நாட்டு பயணம் விமானத்திற்கும் வெளிநாட்டு பயண விமானத்திற்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி, லக்கேஜின் அளவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 55 சென்டிமீட்டர் உயரம், 40 சென்டிமீட்டர் நீளம், 20 சென்டிமீட்டர் அகலம் வரை உள்ள கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.
விதியை மீறினால் என்ன ஆகும்..?
* லக்கேஜ்களின் எடை அல்லது அளவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறினால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
* மே 2, 2024 க்கு முன் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பழைய விதிகள் பொருந்தும்.
* சிறப்பு லக்கேஜ்களுக்கு கூடுதல் இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இவையும் 75 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கக்கூடாது.
* பிரீமியம் எகானமி பயணிகள் 10 கிலோ கைப்பையையும், முதல் வகுப்பு, பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் 12 கிலோ எடையுள்ள கைப்பையையும் எடுத்துச் செல்லலாம்.
* பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பயணிகளின் கூட்டத்தைக் குறைக்க இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.