வங்கி அதிரடி முடிவு...! யுபிஐ பண பரிவர்த்தனைக்கு ஜூன் 25 முதல் புது ரூல்ஸ்...!
ஜூன் 25 முதல், எச்டிஎப்சி வங்கி ரூ.100 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் மற்றும் 500 வரையிலான பண பரிவர்த்தனை செய்தாலும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
தற்பொழுது எச்டிஎப்சி பேங்க் வாடிக்கையாளர் தங்களது யுபிஐ மூலம் ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலோ, செலுத்தினாலோ எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படாது. அதேபோல ரூ.500-க்கும் கீழ் பணத்தை பெற்றாலும் ஜூன் 25-ம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் வராது. இந்த நிலையில் அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை அவர்கள் தொடர்ந்து பெறுவார்கள் என்று வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தெரிவித்தார்.
கடைகளில் கியூஆர் கோட் மூலம் செலுத்தும் ரூ.100-க்கு கீழான பரிவர்த்தனைகள், யுபிஐ மூலம் மொபைல் நம்பர் மூலம் அனுப்பும் ரூ.100-க்கும் கீழான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.500-க்கும் கீழ் பெறும் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படாது. இருப்பினும், ஈமெயில் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். அனைத்து அறிவிப்புகளையும் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.