அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!
ரேஷன் கடைகள் மூலம் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நிறையப் பேர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பொருட்களை பெற குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு முக்கியமானதாகும். தமிழ்நாடு அரசிடமிருந்து ரேஷன் கார்டு வாங்க நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பதற்கான முகவரிச் சான்று தேவை. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் குறைந்தது 6 மாத காலம் தமிழ்நாட்டில் வசித்திருந்தால், ரேஷன் கார்டு கிடைக்கும். வேறு மாநிலத்தில் அதாவது அவர்களுடைய சொந்த ஊரில் ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருந்தால் தமிழ்நாட்டில் புது ரேஷன் கார்டு வாங்க முடியாது.
இந்நிலையில் தான், புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டு கோரி 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ளனர்.
Read More : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!