முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’’2.8 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் கார்டு’’..!! உணவுத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்..!!

2.8 lakh families will be given new ration cards from this month
09:38 AM Aug 02, 2024 IST | Chella
Advertisement

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் நெல் சேமிப்புக் கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நெல்லின் தரம் மற்றும் சேமிப்புக் கிடங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”மழைக்காலங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகளில் நெல் நனைந்து வீணாகாமல் தடுத்திட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் முதல் தற்போது வரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2.8 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதலே வழங்கப்படும்" என்றார்.

Advertisement

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கடன்களாக 20,000 கோடி ஒதுக்கீடு செய்து, வரும் மாதங்களில் வழங்கப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஒப்பந்தம் போட தாமதமானதால் இப்போது போர்க்கால அடிப்படையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read More : ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு..!! நீரில் மூழ்கிய வீடுகள்..!! தவிக்கும் குடும்பம்..!!

Tags :
rationration card
Advertisement
Next Article