முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பத்திரப்பதிவில் வந்த புதிய நடைமுறை..!! இன்று முதல் அமல்..!! மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

08:54 AM Dec 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தற்போது உள்ள நடைமுறைப்படி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே தற்போது இருந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், இன்று முதல் இனி பிரிக்கப்படாத பாக மனை நிலத்தை தனி ஆவணமாகப் பதிவு செய்ய முடியாது. பழைய நடைமுறை என்பது இனி, பிரிக்கப்படாத பாக மனை நிலத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "தமிழ்நாட்டைத் தவிா்த்து, மற்ற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடம் மற்றும் அடிநிலம் சோந்த ஒரு கூட்டுமதிப்பு நிா்ணயிக்கப்படுகிறது.

இந்த மதிப்பானது மொத்த கட்டடப் பரப்பைப் பொருத்து கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் விற்பனை ஆவணம் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழிமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டு, இதுகுறித்து கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டத்தின் முடிவில், இனி கட்டடம், அடிநிலம் சொந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படும். அதேசமயம், குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீா்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீா்வை 7% வசூலிக்கப்படுகிறது. இது 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீா்வை 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, பிரிபடாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இனி அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோா் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது இப்போது பதிவுத் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொருத்து விலக்கிக் கொள்ளப்படும். கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீா்வை சலுகை வழங்கும் அரசின் நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் பயன்பெறுவா்" என்று கூறியுள்ளார்.

Tags :
கட்டுமானம்குடியிருப்புகள்தமிழ்நாடுபத்திரப்பதிவு
Advertisement
Next Article