For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்..!! திருமண மண்டபங்களுக்கு இப்படி ஒரு சோதனையா..?

01:20 PM Feb 09, 2024 IST | 1newsnationuser6
அரசால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்     திருமண மண்டபங்களுக்கு இப்படி ஒரு சோதனையா
Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும்போதே விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பிசினஸும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு மறைமுகமாக அரசு குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னை மற்றும் புதுக்கோட்டையில் திருமண மண்டபங்கள் நிறைய உள்ளன. அவற்றிற்கு முறையான பத்திரப்பதிவு பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் மாநகராட்சியில் சரியாக வரி கட்டப்பட்டு இருக்கிறதா? இல்லை வேறேதும் வில்லங்கம் இருக்கிறதா? என்பது பற்றி விசாரித்து மாநகராட்சி குடைச்சல் கொடுத்து வருகிறதாம். இதனால் விஜய் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

அதன்படி, ஏற்கனவே சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றை தயாரிப்பாளர் லலித்துக்கு ரூ.8 லட்சத்துக்கு வாடகைக்கு விட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள தன் மனைவி, அம்மா மற்றும் மகன் பெயரில் உள்ள மண்டபங்களையும் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக தன் மனைவி பெயரில் போரூரில் அமைந்துள்ள திருமண மண்டபத்தை ரிலையன்ஸ் டிரெண்ட்ஸுக்கு வாடகைக்கு விட்டுள்ளாராம். எஞ்சியுள்ள மண்டபங்களையும் இதுபோல் வாடகைக்கு விடும் ஐடியாவில் உள்ளாராம் விஜய்.

Tags :
Advertisement