For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10 ஆண்டு தண்டனை வழங்கும் புதிய குற்றவியல் சட்ட திருத்தம்...! மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு...!

06:00 AM Jan 03, 2024 IST | 1newsnationuser2
10 ஆண்டு தண்டனை வழங்கும் புதிய குற்றவியல் சட்ட திருத்தம்     மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு
Advertisement

10 ஆண்டு தண்டனை வழங்கும் புதிய குற்றவியல் சட்ட திருத்த பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்ட திருத்தத்தின்படி சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள், தங்களது மூன்று நாள் போராட்டத்தை ஜனவரி 1 அன்று தொடங்கினர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று மத்திய அரசு பிரதிநிதிகளுடன் மோட்டார் வாகன சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

Advertisement

இதை அடுத்து வடமாநிலங்களில் நடந்து  வந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின் லாரி ஓட்டுநர்கள் தரப்பில் அறிவித்துள்ளனர். 10 ஆண்டு தண்டனை வழங்கும் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tags :
Advertisement