மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்..!!
புற்றுநோயைக் குறைக்கும் மருந்து தயாரிப்பில் விஞ்ஞானிகள் மற்றொரு படி முன்னேறியுள்ளனர். சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் மார்பக புற்றுநோய் மருத்துவம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் புற்று நோயை ஒழிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள சோதனைகள் பலன் அளித்து வருகின்றன. பெண்களிடம் கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி எலிகளில் பரிசோதிக்கப்பட்டபோது நல்ல பலனைத் தந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ErSO-TFPy மூலக்கூறை உருவாக்கி, எலிகளில் பயன்படுத்தினர். ஒரு டோஸ் புற்றுநோய் கட்டிகளை முற்றிலும் குறைப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விஞ்ஞானிகள் கூறுகையில், "மார்பக புற்றுநோய் கட்டிகள் உள்ள எலிகளில் இந்த மூலக்கூறு நன்றாக வேலை செய்தது. இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பலன் அளிக்கலாம்" என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.