For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆரம்பமே இப்படியா? முதல் பயணத்திலேயே உடைந்த நவகேரளா பேருந்து கதவு!! 

11:18 AM May 05, 2024 IST | Mari Thangam
ஆரம்பமே இப்படியா  முதல் பயணத்திலேயே உடைந்த நவகேரளா பேருந்து கதவு   
Advertisement

கேரள முதல் கர்நாடகா வரையிலான நவ கேரளா பேருந்து வசதி நேற்று அதன் முதல் பயணத்தை மேற்கொண்டது. மக்களின் அமோக வரவேற்பு பெற்ற இந்த பேருந்தின் கதவு அதன் முதல் பயணத்திலேயே உடைந்து விழுந்தது.

Advertisement

போக்குவரத்து என்றாலே கேரளாதான் என்னும் அளவிற்கு கேரள மாநிலத்தின் போக்குவரத்து அம்சங்கள் வாயடைக்க வைக்கின்றன. இந்நிலையில், பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட நவ கேரளா பேருந்து சேவையும் அறிவிக்கப்பட்டு அதன் முதல் பயணத்தை நேற்று மேற்கொண்டது நவ கேரளா பேருந்து.

கோழிக்கோடு முதல் பெங்களூரு வரை செல்லும் இந்த பேருந்து கல்பேட்டா, சுல்தான் பதேறி, குண்ட்லுபேட், மைசூர், மாண்டியா ஆகிய வழித்தடங்களில் செல்கிறது. மேலும், கோழிக்கொடு, கல்பேட்டா, சுல்தான் பதேறி, மைசூர், பெங்களூரு ஆகிய நிறுத்தங்களில் இந்த பேருந்து நின்று செல்லும்.

அதன்படி, இந்த பேருந்தின் முதல் பயணமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் இருந்து பேருந்து கிளம்பியது. மக்களின் பேராதரவினால் முன்பதிவில் மிகவும் குறைவான நேரத்திலேயே இருக்கும் 25 இருக்கைகளும் புக் ஆனது. இந்த பேருந்தில் ஹைடிராலிக் கதவுகளும் லிப்ட் வசதியும் இருக்கின்றன.

பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே கதவை மூட மூட, அது தானாகவே திறந்திருக்கிறது. புதிய பேருந்தில் கதவு உடைந்திருந்ததால், நடத்துநரும் ஓட்டுநரும் கதவை மூட முடியாமல் தினறி வந்தனர். இதனால், வழியிலேயே இந்த பேருந்து சிறிது நேரம் நிறுத்திவைக்கபட்டது. பின்னர் பயணிகளும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் என அனைவரும் சேர்ந்து கயிறு கட்டி கதவை மூடியிருக்கிறார்கள் . நவ கேரளா பேருந்து வசதி தொடங்கிய முதல் பயணத்திலேயே பேருந்து கதவு உடைந்த சம்பவம், ஆரம்பதே அமர்களாம இருக்குதே என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tags :
Advertisement