Google Search-இல் வந்த புதிய அம்சம்..!! இனி இதை டைப் செய்தாலே போதும்..!!
ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான வளர்ச்சியில், பெரும்பாலான நிறுவனங்கள் புயல் வேகத்தில் செயல்படுகின்றன. ஆனால், கூகுள் நிறுவனமானது, ஓரமாக நின்று எல்லோருடைய ஆட்டத்தையும் பொறுமையாக பார்த்துவிட்டு, பிறகு மொத்த விளையாட்டையும் மாற்றும்படியான வேலைகளை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதற்காக, கூகுள் முதலில் தனது ஏஐ அசிஸ்டன்ட் ஆன கூகுள் பார்ட்-ன் பெயரை கூகுள் ஜெமினி என்று மாற்றியது. அப்போதில் இருந்து ஜெமினி ஏஐ ஆனது அதன் இன்டர்பேஸில் பல வகையான புதிய மாற்றங்களை கண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வழியாகவும் கூட, கூகுள் சில புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையே, ஜெமினி ஏஐ சாட் பாட் ஆனது இன்னும் பரவலான முறையில், இன்னும் எளிமையான முறையில் அணுகக் கூடியதாக இருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அது - சாட் வித் ஜெமினி என்கிற ஷார்ட்கட் (Chat with Gemini shortcut) ஆகும்.
இதன் பயன்கள் என்ன..? இதை கூகுள் க்ரோம் சேர்ச்சில் பயன்படுத்துவது எப்படி..? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். முன்னதாக, நீங்கள் ஜெமினி ஏஐ-ஐ பயன்படுத்த விரும்பினால், ஜெமினி ஏஐ-க்கான பிரத்யேக ஆப் அல்லது இணையதளத்தை அணுக வேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. கூகுள் க்ரோம் சேர்ச் பார் வழியாக ஜெமினி ஏஐ-ஐ நேரடியாக அணுக முடியும். இதற்காக கூகுள் அதன் ஜெமினி ஏஐ-ஐ க்ரோம் சேர்ச் பார் உடன் ஒருங்கிணைத்துள்ளது.
அதாவது, இப்போது ஜெமினி ஏஐ-ஐ அணுக உங்களுக்கு தனி ஆப் அல்லது பிரத்யேக வெப் பேஜ் தேவையில்லை. வெறுமனே கூகுள் க்ரோம் சேர்ச் பாரில் "@" என்று டைப் செய்ய வேண்டும். உடனே கீழ்தோன்றும் மெனுவில், முதலாவதாகவே @gemini - Chat with Gemini என்கிற விருப்பம் இடம்பெறும். அதை தேர்வு செய்து ஜெமினி ஏஐ-யிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை டைப் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான், உங்கள் கேள்விக்கான பதிலை மிகவும் விரைவான முறையில் கொடுக்கப்படும் மற்றும் இந்த ஷார்ட்கட், ஜெமினி ஏஐ-ஐ ஆப் வழியாக அல்லது பிரத்யேக வெப் வழியாக அணுகுவதை விட இது மிகவும் எளிமையாக இருக்கும். கூகுள் ஜெமினி ஏஐ-யின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கும் கூட பிரத்யேக ஆப் மற்றும் வெப்சைட் இருக்கிறது. ஆனால், கூகுள் அதன் ஜெமினி ஏஐ-க்கு கொண்டுவந்துள்ள ஷார்ட்கட், சாட்ஜிபிடி-க்கு இல்லை.
கூகுள் குரோம் உடனான ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்புடன் சேர்த்து, கூகுள் அதன் பிக்சல் 9 சீரிஸில் "ஜெமினி லைவ்" என்கிற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் ஜெமினி உடனான ரியல் டைம் இன்டராக்க்ஷன்களை பெற முடியும். மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட ஜெமினி லைவ் அம்சத்தை பயன்படுத்தலாம்.
Read More : தேர்தல் ஆணையத்தில் விஜய் மீது பரபரப்பு புகார்..!! நடவடிக்கை பாய்கிறதா..?