For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண் ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு...! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்...!

06:20 AM Dec 20, 2023 IST | 1newsnationuser2
பெண் ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு      அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்
Advertisement

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பலர் சேலை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பதில் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நடைமுறை, ஆசிரியர்கள் வசதியான ஆடைகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் அரசு ஆணைக்கு முரணானது. எனவே சுடிதார் அணிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

Advertisement

கோயம்புத்தூரில் உள்ள சௌரிபாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியர்கள் சமிபத்தில்; மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும்போது, தினமும் புடவை அணிய வேண்டும் என்ற நிபந்தனை தனக்கு சங்கடமாக இருப்பதாகக் கூறினார். "துப்பட்டாவுடன் கூடிய வசதியான சுடிதார்களையே நாங்கள் விரும்புகிறோம், ஆனால் பள்ளி நிர்வாகம் ஆண்டு முழுவதும் காட்டன் புடவைகளை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது," என்று கூறி இருந்தனர். ஆசிரியர் சங்கங்கள் சார்பிலும் அரசுக்கு தொடர்ந்து இரு தொடர்பாக கோரிக்கைகளையும் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. அது நம் பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்'' என தெரிவித்தார்.

Tags :
Advertisement