அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது.
இந்த சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள், அதாவது நவம்பர் 10ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த காற்றுப் பகுதி தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும்.
குறிப்பாக 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். நவம்பர் 11 ஆம் தேதி முதல் தொடங்கும் மழைப்பொழிவு, பெரும் பாதிப்பைக் கொடுக்கக்கூடிய பெருமழையாக அமையாமல், பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
Read More : இந்த திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் அதிகரிக்குமா..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!