டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எடுத்த புதிய முடிவு! ஷாக் ஆன பயனர்கள்!
பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் விதிமுறையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்ர் புதிய நடைமுறைகளை கொண்டுவர உள்ளது.
ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் பெரிய அளவு வருமானம் தராததால் அமேசான், நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி புதிய படங்கள் நேரடியாக ஓடிடி-க்கு வாங்குவது நிறுத்தப்பட்டது. சிறிய படங்களை வாங்கினால் அதற்கு பணமாக கொடுக்காமல், ரெவின்யூ ஷேரிங் முறையை கையாளுகின்றனர். எவ்வளவு பேர் அந்த படத்தை பார்க்கிறார்களோ அவ்வளவு பணம் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படும்.
இதில் பெரிய அளவு லாபம் கிடைக்காததால், கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி ஒரே அக்கவுண்டில் இரண்டு பேர் படம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வந்தது.
இந்த நடைமுறையை கொண்டு வந்தால் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறையும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸில் புதிய சந்தாதாரர்கள் நிறைய பேர் இணைந்துள்ளனர். 2023ன் இறுதிக்குள் 13 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்த்தது நெட்பிலிக்ஸ்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இதே நடைமுறையை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜூன் மாதம் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பாஸ்வர்டு பகிர்தல் நிறுத்தப்படுகிறது. டிஸ்னியின் ஸ்ட்ரீமிங் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இதனை அமல்படுத்த தற்போது சோதனை முயற்சியில் இறங்கி உள்ளது ஹாட்ஸ்டார்.