For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPC-க்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 2024 முதல் அமல்.! மத்திய அரசு அறிவிப்பு.!

03:38 PM Feb 24, 2024 IST | 1newsnationuser7
ipc க்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 2024 முதல் அமல்   மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC) பதிலாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisement

தற்போது நடைமுறையில் இருக்கும் பிரிட்டிஷ் கால தண்டனை சட்டங்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட மூன்று புதிய இந்திய தண்டனை சட்டங்களை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனைச் சட்டம் 1860க்குப் பதிலாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

அந்த நேரம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் கேள்விகள் முன் வைத்ததை தொடர்ந்து 150 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மூன்று சட்டங்களும் நிறைவேறியது

இந்த புதிய சட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 1860க்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டமும் 1973 இன் CrPC க்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டமும் 1872 இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா சட்டமும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது இருக்கும் நடைமுறைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மேலும் காலணி ஆதிக்க பிரிட்டி சட்டங்களை நீக்கி புதிய இந்திய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியா முழுமையான சுதந்திரத்தை பெறுகிறது எனவும் தெரிவித்தார் தற்போது இந்த தண்டனைச் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1 2024 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

English Summary: New criminal laws will come to effective from July 1 2024. Central govt announced it today.

Tags :
Advertisement