நாட்டை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா.! 9 நாட்களில் 2 மடங்கு தொற்று.! ருத்ரதாண்டவமாடும் ஜேஎன் 1.!
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் இருந்ததை விட தற்போது இரு மடங்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் எட்டாம் தேதி கொரோனா தொற்றின் புதிய வகை கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களிலும் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது. ஜேஎன் 1 பிஏ 2.86 என்ற புதிய வகை கொரோனாவிற்கு பைரோலா என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த புதிய வகை கொரோனாவில் இருந்து 19 புதிய வேரியண்ட் நாடெங்கிலும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்திய தேசிய மெடிக்கல் அசோசியேஷன் துணை சேர்மன் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் கழிவு நீர் வெளியேற்றப்படும் நிலையங்களில் இந்த வகை வேரியண்ட்கள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் 938 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1970 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய மெடிக்கல் அசோசியேசன் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா விற்கு எதிராக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனா அமெரிக்காவில் பரவி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.