For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மின் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம்..!! சூப்பர் திட்டத்தை கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!! இனி ரொம்ப ஈசிதான்..!!

01:43 PM Dec 29, 2023 IST | 1newsnationuser6
மின் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம்     சூப்பர் திட்டத்தை கொண்டுவந்த தமிழ்நாடு அரசு     இனி ரொம்ப ஈசிதான்
Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான புதிய முறையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, எப்படி கரண்ட் பில் கட்டுவது தெரியுமா? சமீபகாலமாகவே, வீடுகளில், கரண்ட் பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதனால்தான், இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதேபோல, முறைகேடாக காட்டும் மீட்டர்களுக்கு முடிவுகட்ட வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டமும் கைவசம் உள்ளது. வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில்லை அறிந்து கொள்ளலாம். இதற்கு நடுவில் மற்றொரு வசதியை மின்வாரியம் செய்து தரப்போவதாக சொன்னார்கள். பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விவரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம். பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விவரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விவரம் தெரிவிக்கவே, புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வரப்போவதாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடுமாம். இந்நிலையில், செல்போனில் மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டும் வசதியை மின்வாரியம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. செல்போனுக்கு அதிகாரப்பூர்வமான மெசேஜ் வந்ததுமே, நீங்கள் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக செலுத்திவிடலாம்.

உங்கள் வாட்ஸ் அப்புக்கு வரும் மெசேஜில் லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, அதன் அருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது கட்டணம் செலுத்தும் செயல்முறை ஆரம்பமாகும். கட்டணம் செலுத்தும் பக்கம் திறந்ததுமே, அதில் நீங்கள் எந்த வகை மின்கட்டணத்தை செலுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்து மின்கட்டணத்தை செலுத்திவிடலாம். இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோர் தங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement