டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்..!! இனி எல்லாமே டிஜிட்டல் தான்..!! முதற்கட்டமாக சென்னை, கோவையில்..!!
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்துக்கு பிறகு கஞ்சா உள்ளிட்ட பிற போதை பொருட்களை பலர் நாட தொடங்கியதால், மது விற்பனை குறைந்து போனதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது.
அதன்படி, மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க மது விற்பனையில் டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளிலும் இந்த டிஜிட்டல் வசதியை கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களில் தீபாவளிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது, தீபாவளிக்கு பின்னர் கோவை வடக்கில் உள்ள 166 கடைகளிலும், வடசென்னையில் உள்ள 100 கடைகளிலும் இந்த டிஜிட்டல் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த கடைகளுக்கு இணையதள வசதி உள்ளிட்டவற்றை செய்துகொடுக்க மத்திய அரசின் ரெயில் டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, கோவை வடக்கு, வடசென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இணையதளம் வசதி செய்து கொடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதே நேரத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். இந்த டிஜிட்டல் நடைமுறையால், நீண்ட காலமாக உள்ள பிரச்சனையான பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது.
Read More : அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்..? அப்படினா இந்த விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!