முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப் பள்ளிகளில் வரப்போகும் புதிய மாற்றம்..!! அனைத்து ஆசிரியர்களுக்கும்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு..!!

05:01 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் 33,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கும் வகையில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Advertisement

அதாவது 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு மற்றும் 6,552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்று பயனடைய முடியும் என்பதற்காக டிஜிட்டல் வகுப்புகளுக்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

இதற்காக தமிழ்நாட்டில் 53,349 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கையடக்க கணினி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மாதம் ரூ.1,500 இணைய கட்டணத்துடன் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக 81 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
அரசுப் பள்ளிகள்தமிழ்நாடு அரசுபள்ளிக்கல்வித்துறைபுதிய மாற்றம்
Advertisement
Next Article