For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"சஞ்சார் சாத்தி" மோசடி அழைப்புகள் குறித்த புகார்களுக்கு மத்திய அரசின் புதிய இணையதளம்...!

New central government website for complaints about fraudulent calls
11:17 AM Dec 15, 2024 IST | Vignesh
 சஞ்சார் சாத்தி  மோசடி அழைப்புகள் குறித்த புகார்களுக்கு மத்திய அரசின் புதிய இணையதளம்
Advertisement

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மோசடியான தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்கிறது. இந்திய கைபேசி எண்களைப் போன்ற தோற்றமளிக்கும் போலியான சர்வதேச அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்கும் வகையில், சர்வதேச அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான டிஜிட்டல் கைதுகள், பிற தொலைத் தொடர்பு மோசடிகள், ஆள்மாறாட்டம் போன்ற அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை கையாள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement