"பச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து...." நெஞ்சை பதறச் செய்யும் கொடூர சம்பவம்..
எப்படியாவது எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடாதா என்று ஏங்கும் தம்பதிகள் அநேகர். அதே சமயம் தங்களுக்கு பிறந்த குழந்தையை குப்பையில் வீசிச்செல்லும் மிருக குணம் கொண்ட மனிதர்களும் பெருகிவிட்டனர். அந்த வகையில், தஞ்சாவூரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் சரகம் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில், குணபாலன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த தென்னந்தோப்பில், பச்சிளங்குழந்தை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: “அம்மா சொல்றேன்ல, போய் அவருக்கூட படு”; காசுக்காக தாய் செய்த காரியம்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..