முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல”..!! பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவம்..!!

07:34 AM Feb 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை எனவும், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிக்க பாமகவின் பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி இல்லை எனவும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்யவும், கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags :
அன்புமணி ராமதாஸ்கூட்டணி கட்சிகள்நாடாளுமன்ற தேர்தல்பாமக பொதுக்குழு கூட்டம்பேச்சுவார்த்தை
Advertisement
Next Article