மெக்னீசியம் குறைபாட்டின் இந்த 4 அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீங்க.. மருத்துவர் வார்னிங்...
மெக்னீசியம் பல உடல் செயல்பாடுகளுக்கு அவசியம். சுமார் 60% மெக்னீசியம் நமது எலும்புகளிலும், மீதமுள்ளவை தசைகள், திசுக்கள் மற்றும் திரவங்களிலும் சேமிக்கப்படுகிறது. இது ஆற்றல் உற்பத்தி, புரத தொகுப்பு, மரபணு பராமரிப்பு, தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஒழுங்குமுறை உள்ளிட்ட சுமார் 600 வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கிறது. இது கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், தளர்வைத் தூண்டுவதன் மூலமும், தசை பதற்றத்தை நீக்குவதன் மூலமும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஒரு அத்தியாவசிய கனிமமாகும் மெக்னீசியம் ஆகும். இது ஒற்றைத் தலைவலி மற்றும் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது. இந்த தளர்வு விளைவு, மாதவிடாய் காலத்தில் அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருக்கும் மனநிலை ஊசலாட்டங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது, மேலும் இது வயிற்று உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் மிகவும் பயனளிக்கும்.
எனினும் மெக்னீசியம் குறைபாடு தலைவலி மற்றும் மோசமான தூக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. தூக்கத்தின் தரம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் அதன் பங்கை முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் சில அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர், டாக்டர் சௌரப் சேத்தி, மெக்னீசியம் குறைபாட்டின் 4 அறிகுறிகளைப் பகிர்ந்து கொண்டார், நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
தசைப்பிடிப்பு
மெக்னீசியம் தசை தளர்வுக்கும், தசை செல்களில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தை சமநிலைப்படுத்துவதற்கும் முக்கியமானது.
குறைந்த ஆற்றல்
மெக்னீசியம் உங்கள் உடலின் முக்கிய ஆற்றல் மூலமான உங்கள் செல்களின் ATP உற்பத்திக்கும் முக்கியம்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
மெக்னீசியம் சீரான எலக்ட்ரோலைட் அளவை ஆதரிப்பதன் மூலம் உங்கள் இதயத்தின் தாளத்தை சீராக வைத்திருக்கிறது.
செரோடோன் ஹார்மோன்
மெக்னீசியம் செரோடோனின், நல்ல ஹார்மோனை அதிகரிக்கிறது. மேலும் இது உங்கள் கார்டிசோல் அளவை நிர்வகிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான கனிமமாகும், ஏனெனில் இது இதய தாளத்தை சீராக்க மற்றும் சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது உடலில் சுமார் 300 உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு காரணமான 3 நுண்ணிய தாதுக்களில் ஒன்றாகும்.
மெக்னீசியம் குறைபாடு தசைச் சுருக்கங்கள், பிடிப்புகள், வலிப்பு, அசாதாரண இதய தாளங்கள், ஆளுமை மாற்றங்கள் மற்றும் கரோனரி பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
எனவே உங்கள் உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம். முந்திரி பருப்புகள், பாதாம், முழு தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள், இலை பச்சை காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான மெக்னீசியம் சத்து கிடைக்கும். மேலும் மெக்னீசியம் கிளைசினேட் போன்ற சப்ளிமெண்ட்ஸ் எளிதாகக் கிடைக்கின்றன. எனினும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே இந்த சப்ளிமெண்ட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Read More : எப்பேர்ப்பட்ட மாதவிடாய் பிரச்சனையாக இருந்தாலும் சரி, இனி நீங்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இல்ல..