டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு..!!முன்கூட்டியே கணித்த கார்டூன் சேனல்!!
டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பிரபல கார்டூன் நிகழ்ச்சியான நிகழ்ச்சியான தி சிம்சன்ஸ் முன்கூட்டியே கணித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிம்சன்ஸ் கார்டூன் இதற்கு முன்பும் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளரான டிரம்ப், பிரச்சார மேடையில் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பிரபல கார்டூன் நிகழ்ச்சியான நிகழ்ச்சியான தி சிம்சன்ஸ் முன்கூட்டியே கணித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சிம்சன்ஸ் கார்டூன் இதற்கு முன்பும் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு டிரம்ப் அதிபராவது, தானாக இயங்கும் கார்கள், விஆர், எபோலா எனப் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தையும் சிம்சன்ஸ் கார்டூன் கணித்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. சிம்சன்ஸ் எப்படி இந்தளவுக்குத் துல்லியமாகக் கனித்துள்ளது என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான கார்ட்ட்டூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more | ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ நிதி உதவி..!!