For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"செர்லாக்கில் அடிக்டிவ் சுகர்" குற்றச்சாட்டு…! நெஸ்லே நிறுவனம் சொல்வதென்ன..!

01:52 PM Apr 18, 2024 IST | Mari Thangam
 செர்லாக்கில் அடிக்டிவ் சுகர்  குற்றச்சாட்டு…  நெஸ்லே நிறுவனம் சொல்வதென்ன
Advertisement

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக்கில் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் நெஸ்லே நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

Advertisement

பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேனைச் சேர்ப்பதாகவும், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் சர்வதேச வழிகாட்டுதல்களை மீறுவதும் கண்டறியப்பட்டது.

நெஸ்லேவின் முக்கிய சந்தையான ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்கப்படும் செர்லாக்கில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படாத நிலையில் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நெஸ்லேவின் இந்த செயலை உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெஸ்லே தரப்பிலிருந்து விளக்கம் கிடைத்துள்ளதாக ஆய்வு செய்த புலனாய்வு அமைப்பு சொல்கிறது.

நெஸ்ஸே செய்தி தொடர்பாளர் கூறியதாவது, "கடந்த ஐந்து ஆண்டுகளில் நெஸ்ஸே இந்தியா குழந்தை தானியங்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மாறுபாட்டை பொறுத்து, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30 சதவீதம் வரை குறைத்துள்ளோம். தொடர்ந்து போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்து தரம், பாதுகாப்பு மற்றும் சுவை ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் சேர்க்கப்பட்ட சர்க்கரையின் அளவை மேலும் குறைத்து மறுசீரமைப்பு செய்கிறோம் எனக் கூறியது.

நெஸ்லே இந்தியா செய்தி தொடர்பாளரின் அறிக்கையை தொடர்ந்து, மற்ற நாடுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவு கண்டறியப்பட்டுள்ளது.

தாய்லாந்து - 6 கிராம்
எத்தியோப்பியா - 5 கிராம்
தென்னாப்பிரிக்கா - 4 கிராம்
பிரேசில் - 3 கிராம்
இந்தோனேஷியா - 2 கிராம்
மெக்ஸிகோ - 1.7 கிராம்
நைஜீரியா, செனகல் - 1 கிராம்

இங்கிலாந்து, பிலிப்பைன்ஸில் குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து ஆசிய, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விற்கப்படும் சுவிஸ் பன்னாட்டு நிறுவனங்களின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை பெல்ஜிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் சுக்ரோஸ் மற்றும் தேன் வடிவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஐரோப்பிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த உணவிலும் சர்க்கரை சேர்க்கப்பட கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement