For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நரம்புத் தளர்ச்சியா..? அப்படினா உங்கள் உணவில் இதை சேர்க்க மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள்..!!

Ginger holds the first place in the manual therapy used for digestion.
05:30 AM Dec 27, 2024 IST | Chella
நரம்புத் தளர்ச்சியா    அப்படினா உங்கள் உணவில் இதை சேர்க்க மறந்துறாதீங்க     ஏராளமான நன்மைகள்
Advertisement

செரிமானத்துக்காக பயன்படுத்தப்படும் கை வைத்திய முறையில் பெருங்காயத்துக்கு முதல் இடம் உண்டு. இஞ்சிச் சாறு மற்றும் தேனுடன் பெருங்காயத்தைக் கலந்து குடிக்கலாம். இது குடலில் உள்ள கிருமிகளை நீக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். சுவாச நோய், நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோய், வலிப்பு நோய் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடியை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிட வேண்டும்.

Advertisement

இது தாய்-சேய்க்கு ஏற்படும் வாயுப் பிரச்சினை, கோழைக்கட்டு, வாந்தி, அஜீரணம், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் போன்ற பாதிப்புகளையும் குணப்படுத்தும். முட்டையின் மஞ்சள் கருவுடன் பெருங்காயத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும். பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து, சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி சரியாகும். பெருங்காயம் உடலில் உள்ள வாதத்தையும், கபத்தையும் சமநிலைப்படுத்தி, நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அதன் புகையை சுவாசித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

இதில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் மார்புச் சளியை வெளியேற்றும். ½ டீஸ்பூன் பெருங்காயத்தூளை வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வருவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும். இதில் உள்ள புரதச்சத்து, உடலில் சீரான ரத்த ஓட்டத்தை உண்டாக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, முதுகு வலி மற்றும் தலைவலியை குறைக்கும். குறிப்பு: தினமும் 5 முதல் 30 மில்லி கிராம் வரை பெருங்காயம் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகரிக்கும்.

Read More : சொந்த வீடு கட்டப்போறீங்களா..? இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் ரூ.3.50 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement