“நெப்போலியன் மகனிற்கு மீண்டும் திருமணமா?”; நெப்போலியன் அளித்த பரபரப்பு பேட்டி..
பலரின் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷிற்கு கோலாகலமா நெப்போலியன் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணத்தை பற்றிய விமர்சனங்கள் இன்றும் வந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில், நெப்போலியன் தனது மகனிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க போவதாக கூறியுள்ளது மீண்டும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பணத்தை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கலாமா என பல்வேறு எதிர்ப்பு கருத்துகள் வந்தாலும், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இவரை சிறந்த தந்தை என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகர் நெப்போலியன் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், தனது மகன் திருமணம் குறித்தும், அவர் தன் வாழ்வில் இழந்தவை குறித்தும் மனம் விட்டு பேசியுள்ளார். அதில், “என்னை பலர் நன் ஒரு சிறந்த தந்தை என்று கூறுகின்றனர்.. ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு தந்தையாக நான் என் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை தான் செய்திருக்கிறேன். எனக்கு தெரியும் என் பையனுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி” என்று கூறியுள்ளார். மேலும், “என் பையன் 4 வயது இருக்கும் போது தான் இப்படி ஒரு அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டான்.
அப்போது மருத்துவர்கள், இவரால் 10 வயது வரை தான் நடக்க முடியும். 18 வயது வரை தான் உயிரோடு இருப்பார் என்று கூறினார்கள். இதனால் நானும் என் மனைவியும் பயங்கரமாக அழுதோம். டாக்டர்கள் சொன்னது போலவே தனுஷ் 10 வயதில் வீல் சேரை பயன்படுத்த தொடங்கிவிட்டான். எனக்கு 2 பேரும் மகன்கள் தான்.எனக்கு மகள் இல்லாத குறையைப் போக்க தான் இப்போது மருமகளை எடுத்துள்ளோம். இனி நீ தான் எங்கள் வீட்டின் மகள் எனக் கூறிதான் அவரை அழைத்து வந்தோம். அமெரிக்காவில் கல்யாணம் பண்ண முடியாததால், இங்கிருந்து ஓடிப்போய் ஜப்பானில் கல்யாணம் செய்கிறார்கள் என பலரும் விமர்சிக்கிறார்கள்.
ஒரு பெண்ணைப் பார்த்து என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தது தவறா? எந்த நாட்டு சட்டமும் என்னை ஒன்றும் தடுக்கவில்லை. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஜப்பானில் 6 மாதம் இருப்பர். இதையடுத்து, அமெரிக்கா சென்று அங்கு ஒருமுறை திருமணம் செய்து, வெகு விமர்சையாக என் மருமகளை அறிமுகப்படுத்துவேன் எனக் கூறினார்.