”அதிமுகவும் இல்ல.. தவெகவும் இல்ல”..!! இதுதான் சரியான டைம்..!! திமுகவை அட்டாக் செய்ய காத்திருக்கும் சீமான்..!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தேசிய கட்சியான பாஜகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. சுமார் 30% வாக்காளர் பலத்தை கொண்ட செங்குந்த முதலியார் சமூகத்தில் இருந்து திமுக வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மூன்றாவது முறையாக வாக்களிக்க தயாராகி வருகின்றனர். கடந்த தேர்தலில் வெறும் 10,000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, 6.37% வாக்குகளை பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 60,000 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதனால் இந்த தேர்தலில் அதிமுக, பாஜகவின் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைத்தால் கிட்டத்தட்ட 70,000 வாக்குகள் வரை கிடைக்கும் என சீமான் கணக்கு போட்டுள்ளார். இந்த தேர்தலை தவெக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அவர் ஆதரவு வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்பது சீமானின் கணக்கு. 2019 எம்பி தேர்தலில் ஈரோடு தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்ட நிலையில், இடைத்தேர்தலிலும் அவரே களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதனால் மக்களுக்கு நன்கு அறிமுகமான அவர் வாக்குகளை அறுவடை செய்ய தயாராக இருக்கிறார். பிரதான கட்சிகள் களத்தில் இல்லாதது, அதிமுக வாக்குகள், பொங்கல் பரிசு தொகுப்பால் மக்கள் அதிருப்தி என பல்வேறு விவகாரங்கள் இருக்கும் நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கி வெற்றிக் கோட்டை நெருங்குவது தான் சீமானின் வியூகம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பெரியார் குறித்த பேச்சால் ஈரோட்டில் சீமானுக்கு எதிர்ப்பு இருக்கிறது.
கடந்த இடைத்தேர்தலின் போது அருந்ததிய சமூகம் குறித்து பேசியதும் சீமானுக்கு சிக்கல் தான். திமுகவுக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், கொஞ்சமாவது நாம் தமிழர் நெருக்கடி கொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : அவசர தேவைக்கு கடன் வேண்டுமா..? இனி ஆதார் கார்டு இருந்தாலே போதும்..!! எத்தனை லட்சம் வரை வாங்கலாம் தெரியுமா..?