For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது..!! எப்படி தெரிந்து கொள்வது..? லிங்க் உள்ளே..!!

The NEET re-examination for the students who were given grace marks has been held and the results have been released.
09:50 AM Jul 01, 2024 IST | Chella
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது     எப்படி தெரிந்து கொள்வது    லிங்க் உள்ளே
Advertisement

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து, வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது. இந்நிலையில், இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து, தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1,563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக என்டிஏ விளக்கம் அளித்தது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன்23 அன்று 7 மையங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பதிவில், 1,563 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 813 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை https://exams.nta.ac.in/NEET என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Read More : அண்ணாமலையின் ஆட்டம் ஓவர்..!! தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tags :
Advertisement