முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
நீட் தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த சூழலில் நீட் முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று முதுநிலை நீட் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ஒத்திவைத்துள்ளது; முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Read more ; Result: 30-ம் தேதி நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்…!