பரபரப்பு...! நீட் முறைகேடு... இன்று நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்...!
நீட் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்ததுஹ தேசிய தேர்வு முகமை மேல் தவறு இல்லை’ என மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். தேர்வு கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு OMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாக பல கோடி ரூபாய் காசோலைகள், தொகை குறிப்பிடாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்த சதிச்செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு, அமைப்பு ரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. நீட் ஒழிப்பு போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள், இத்தேர்வால் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தகுதிக்கான அளவுகோல் என பொய்வேடம் தரித்த நீட்தேர்வு, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி பாதிக்கிற ஒரு மோசடிஎன்பது திரும்ப திரும்ப நிரூபணம் ஆகிவிட்டது. மாணவர்கள், ஏழைகள், சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசுஇத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மை மற்றும் தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் மாநில தலைமையகங்களில் இன்று மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.