For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

NEET: நீட்டிக்கப்பட்ட ஒருநாள் கால அவகாசம்!… மிஸ் பண்ணிடாதீங்க!

06:08 AM Apr 09, 2024 IST | Kokila
neet  நீட்டிக்கப்பட்ட ஒருநாள் கால அவகாசம் … மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

NEET: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை (ஏப்ரல் 10) வரை ஒருநாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வாயிலாகவே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி 2024-25ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு செய்வதற்கு இன்று (ஏப்ரல் 9) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நாளை (10ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 5ம் தேதி நாடு முழுவதும் 14 இடங்களில் நடைபெற உள்ள இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக நாளை இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Readmore: Modi: பிரதமர் மோடியின் டிகிரி சர்டிபிகேட் விவகாரம்…! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!

Advertisement