For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ANNAMALAI | "எத்தனை உயிர்கள் போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது"… தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை சர்ச்சை பேச்சு.!!

04:24 PM Apr 17, 2024 IST | Mohisha
annamalai    எத்தனை உயிர்கள் போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது … தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை சர்ச்சை பேச்சு
Advertisement

Annamalai: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப்பதிவு தமிழ்நாடு பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

Advertisement

பிரச்சாரம் முடிவடைந்ததற்குப் பிறகு வாக்கு சேகரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயமுத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை(Annamalai) இடம் பெண் ஒருவர் நீட் தேர்வால் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாஜக வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை எத்தனை உயிர்கள் போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என தெரிவித்திருக்கிறார். பல உயிர்களை காவு வாங்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது . அப்படி இருக்கும்போது அண்ணாமலை கூறிய இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: இஸ்ரேலுடன் வேலை செய்வதை கூகுல் நிறுத்த வேண்டும் ; போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

Advertisement